மன்னாரில் வெடிப்பொருட்கள் மீட்பு

373
யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் தொகையொன்று மன்னார் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார், இல்லுபிட்டி பிரதேசத்தில் வைத்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் விமான படை மற்றும் இராணுவ படையினர் வழங்கிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே இவ் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.

இதன்படி 29  தற்கொலை குண்டுகள், இரு 81 மில்லிமீட்டர் ரக மோட்டர் ரவைகள், மற்றும் விடுதலை புலிகளின் உத்தியோக பூர்வ உடைகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE