உலக குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகஸ்தர்கள் தினநிகழ்வு மன்னார் நகரமண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை(5) நடைபெற்றது.
குடும்பநல சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக வட மாகாண கடற்றொழில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் .எஸ். யூட் ரதினி. மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி.ரஜனி அன்ரன் சிசில், வட மாகாணத்தின் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார பணிப்பாளர்கள்,வைத்தியர்கள், சுகாதார உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள் . வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குடும்பநல மருத்துவ மாதுகள்; இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் கலை நிகழ்சிகளில் பங்கு பற்றினர்.
இதனை தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகஸ்தர்களாக பணி புரிந்து ஓய்வு பெற்ற நான்கு பெண்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவிக்கையில் ஆசியாவிலேயே ஒரு சிறந்த சுகாதார சேவையை கொண்ட ஒரு நாடாக முன்னேற்றகரமான நாடாக எமது நாடு உள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுகாதார குறிகாட்டிகள் மிக சிறப்பாக காணப்படுவதாக உள்ளது அதனை உலக சுகாதார நிறுவனங்களும் ஏனைய நிறுவனங்களும் அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர் என்றார்.
Mark Anand – Mannar