பிரபல இளம் இயக்குனர் விக்கினேஷ் சிவனுடன் நயன்தாரா காதல்? வெளிவந்த உண்மை

418

நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதலில் விழுந்து பின், அதிலிருந்து விலகி தற்போது சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’நானும் ரவுடி தான்’ படத்தில் நடிக்கின்றார். இப்படத்தை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் விக்னேஷ் சிவனை தன் சொந்த ஊருக்கு அழைத்து சென்று உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தினாராம் நயன்தாரா. மேலும் இருவரும் மலையாளி என்பதால் கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

SHARE