வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு
போராட்டம்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட
மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தவும் இன்று (20) மாலை 02.00 மணியளவில் வவுனியாவில் தெற்கு
வலயகல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்ட வன்னிபாராளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதனிடம் ஆசிரியர் சமூகத்தால் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கு
மகஜர் ஒன்று வழங்கப்பட்டதுடன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்
ஜி.ரி.லிங்கநாதனிடம் வடமாகாண முதலமைச்சருக்கு கையளிப்பதற்காக மகஜர் ஒன்றும்
வழங்கப்பட்டது.
நிகழ்வில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், புதிய ஜனநாயக மாக்சிச-
லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் பிரதீபன் ஆகியோர்
கலந்தகொண்டனர்.