உயிருக்கு ஆபத்தான் நிலையில் வீதியில் அறுந்து வீழ்ந்து மின்கம்பிகளை அகற்றாத மின்சாரசபை

329

உயிருக்கு ஆபத்தான் நிலையில் வீதியில் அறுந்து வீழ்ந்து மின்கம்பிகளை அகற்றாத மின்சாரசபை வவுனியா யாழ் வீதியில் சோயோ ஒழுங்கை பகுதியில் இரவு நேரம் மின்கம்பி அறுந்து வீடுகளின் முன்னால் வீழந்த நிலையில் மின்சார சபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டபோதிலும் உயிர் ஆபத்தையும் மின்சாரசபை கருத்தில் கொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு வேளை மின்சாரம் வழங்கப்படும் கம்பிகள் அறுந்து வீடுகளின் முன்னால் வீழந்துள்ளது. இதன் காரணமாக சிறுவர்கள் அதிகமாக உள்ளபகுதியாகையால் அப்பகுதி மக்கள் மின்சாரசபைக்கு சம்பவத்தை தெரியப்படுத்தி மின்கம்பிகளை மீள இணைத்து வடுமாறு கோரியுள்ளனர்.

எனினும் வவுனியா மின்சார சபையினர் வட மாகாண மின்சார சபைக்கு அறிவித்தலை வழங்குமாறு தெரிவித்துள்ளனர். இதன்பிரகாரம் அப்பகுதி மக்கள் வட மாகாண மின்சார சபைக்கு அறிவித்தலை வழங்கியபோதிலும் சுமார் 4 மணி நேரம் மின்சார கம்பிகள் அகற்றப்படவில்லை. இதன்பின்னர் மீண்டும் அப்பகுதி மக்கள் வட மாகாண மின்சாரசபைக்கு உயிராபத்து கருத்தி விரைவாக மின்சார கம்பிகளை அகற்றுமாறு கோரியபோதிலும் சுமார் 9 மணிநேரம் கழித்தும் மின்கம்பிகள் அகற்றப்பவில்லை. இதேவேளை அப்பகுதி வீடுகளுக்கும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE