சமூகவிரோதிகளுக்கு பொலிஸாரினது நடவடிக்கையினால் அவர்கள் தவறு இழைப்பதுக்கு ஏதுவாக நடந்துள்ளது.
வித்தியாவின் கொலைதொடர்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தினப்புயல் ஊடகம் தொலைபேசியூடாக வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புங்குடுதீவைச் சேர்ந்த வித்தியா காமுகரினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. இது தொடர்பாக பல்வேறு விமர்ச்சனங்கள் எழுப்பப்படுகின்ற பொழுதிலும், வித்தியாவின் கொலைக்கு பொலிஸாரே பொறுப்புக் கூறவேண்டும். இதற்கு முன் நடைபெற்ற பலியல் கொலைகள் தொடர்பாக ஒரு இறுக்கமான நிலைமையை பொலிஸார் அல்லது நீதி நிர்வாகம் மேற்கொண்டிருந்தால் இன்று வித்தியாவை அதே சம்பவத்தால் இழந்திருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்காது.
குறிப்பாக காரைநகரில் இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், நெடுந்தீவில் இரண்டு பெண் பிள்ளைகள் பாலியல்வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். கனகராயன்குளம், நெடுங்கேணி, மன்னார், குருநகர், பருத்தித்துறை, விசுவமடு, போன்ற இடங்களிலும் பலியல் வன்முறைகளால் பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான வழக்குகளோ, இதற்கு நீதி கிடைக்கின்ற செயற்பாடுகளோ மந்தகதியிலேயே இருக்கின்றது. மேற் கூறப்பட்ட பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குற்றவாளிகள் தாங்கள் எதையும் செய்யலாம் என்று துணிந்துவிட்டார்கள். ஆகவே பொலிஸாரும் தங்களுடைய பிழையினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இராணுவம், கடற்படை என்று பற்சபாதகம் காட்டாது நீதியாக செயற்பட்டிருந்தால் மீண்டும் இவ்வாறான ஒரு பாலியல் வன்முறையினால் கொல்லப்படும் சூழ்நிலை உருவாகியிருக்காது. இதற்கு முன் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட பலர் பொலிஸாரினால் பணத்தை வாங்கி தப்பவிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலைமை மாற்றம் பெறாத வகையில் பொலிஸாரினால் இந்த பாலியல் கொலைகளுக்கு முடிவு கட்ட முடியாது. இன்னும் குற்றவாளிகள் அதிகாரித்துக் கொண்டுதான் செல்வார்கள். என்றும் சுட்டிக்காட்டிய அவர்,
இவ்விடயத்தை அரசலியல் வாதிகளுடைய தலையீடின காரணமாகவே பெரிதுபடுத்தப்பட்டது மட்டுமல்லாது 127 பேர் கைது செய்வதற்கும் இவர்களே பின்வளத்தில் இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது இது தொடர்பான தங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு. மக்கள் கிளர்ச்சியை யாராலும் கொச்சைப்படுத்தவோ, தடுக்கவோ இயலாது நீண்டகாலமாக இராணுவத்தினரால் ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் தற்பொழுது இந்த ஆட்சியில் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்தப் புரட்சி என்பது மக்களால் உணர்சிவசப்பட்டு வந்ததே ஒழிய எந்த அரசியல் வாதிகளுடைய தூண்டுதலும் இல்லை.
ஆனால் பிற்பாடு சமூகவிரோதிகள் நீதி மன்றத்துக்கு கல் வீசியமையும், அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்தமையும் பின்புலத்தில் இருந்திருக்கலாம். கூட்டமைப்பு சார்பாக நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை நாளை சந்தித்து இவர்களது விடுதலை தொடர்பாக ஒரு முடிவு காண இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.