சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

382

சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

M_Id_369201_Mahinda_Rajapaksa

இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த- தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி சின்ஹூவா மேலும் தகவல் வெளியிடுகையில்,

“ராஜபக்சக்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே வாராந்த கலந்துதுரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாராந்தம் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதையும், சின்ஹூவா சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE