புங்குடுதீவில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இதுவரை கடத்தப்பட்டு காமுகர்களால் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு, நீலப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்களது உடல் மீன்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தபொழுது மேற்படி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இவ்வாறான சம்பவங்கள் மிகவும் நுற்பமான முறையில் இடம்பெற்றுவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து பேர் இதற்கு முன்னரும் இவ்வாறான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகவும், பொலிசாரிடம் முறைப்பாடு செய்த பொழுதும் அந்த முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை எனவும், அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி இவர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள் எனவும் அவ் பிரதேச வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் நடைபெற்ற பாலியல் கொலைகளுக்கு அப்பகுதியில் இருந்து நேவியும் தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள்.
எப்படி இந்தக் காமுகர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று உற்று நோக்கும் பொழுது அப்பிரதேசத்தில் வசிக்கக் கூடிய அழகான பெண்கள், பிற பிரதேசங்களிலும் வசிக்க கூடிய பெண்களையும் காதல் வசப்படுத்தி இவர்களை நிர்வாணப் படம் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்கும் தொழிலையே இவர்கள் செய்து வந்திருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடன் படாதவர்கள் இந்தக் காமுகர்களினால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதே வழக்கம்.
முழு நீலப் படங்கள் எடுக்கப்பட்டவர்கள் இந்தக் காமுகர்களால் அப்பகுதியைச் சேர்ந்த கடற்படையினருக்கு கொடுக்கப்படுவதாகவும், அவர்களும் தாம் தேவைக்கேற்ப அப்பெண்களை பயன்படுத்திவிட்டு கொலை செய்துவிட்டு அவர்களது உடல்களை கடலில் வீசி விடுவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன் இடம்பெற்ற மேற்படி சம்பவங்களை ஆராய்வது மட்டுமல்லாது, இதனோடு தொடர்புடைய இன்னும் பலரை பொலிசார் கைது செய்வதற்கு தீவிரமாக வலை விரித்துள்ளனர்.
வெளிநாட்டு முகவர்கள் ஒரு சிலர் இப்பொழுது இப் பிரதேசத்தில் கண், கிட்ணி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இப்பகுதியில் உள்ளாச பயணிகளின் வருகையை அடுத்து அவர்களுக்கு விருந்தோம்பலாக பல அப்பாவிப் பெண்களை இந்தக் காமுகர்கள் பணத்துக்காக வித்த சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான்’ என்ற பழமொழிக்கு அமைய இந்தக் காமுகர்கள் வித்தியாவினுடைய கொலையை அடுத்து அகப்பட்டுக் கொண்டதையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பயம் காரணமாக அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் இந்தக் காமுகர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில்லை. இவர்கள் அந்த ஊரிலே இவ்வாறான அட்டூழியங்களை செய்து வருகின்றார்கள் என்று இவ் பிரதேச வாழ் மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ் பிரதேசத்தில் ஈபிடிபியின் செல்வாக்கினை பயன்படுத்தியே இந்தக் காமுகர்கள் செயற்பட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. தற்பொழுது காணாமல் போனோர்கள் தொடர்பில் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றது. இனி இனித்தான் யார்? யார்? எங்கே? எப்படி? கொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெரியவரும்.
இப்பிரதேசத்தில் பாலடைந்த வீடுகள் பல இருப்பதால் இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் இந்தக் காமுகர்கள் முதல் நாளே குறித்த பெண்ணை பிடித்துக் கட்டி வைத்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கு உடந்தையாக இப் பிரதேசத்தின் நேவிப்படை இருந்ததாகவும் வித்தியாவின் கொலையில் தொடர்புடைய சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கொலைகளை மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் வேண்டுகோளாக அமையப்பெறுகின்றது.
விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை போன்று பாலியல் தொடர்பான விடயங்களுக்கு நடு வீதியில் வைத்து சுட்டுக்கொல்லும் ஒரு சட்டத்தை அமுல்ப்படுத்தினால் ஏனையவர்களும் திருந்துவதற்கான வாய்ப்பு அமையப்பெறும்.
குமுதினி படுகொலை தொடக்கம் வித்தியாவின் கொலை வரை இருபது பாலியல் கொலைகள் பொது மக்களாலும், பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதற்கான தீர்வினையும் நீதியான முறையில் மைத்திரி அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்கள். இருந்தும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஆண், பெண், கற்பினித் தாய்மார் இவர்களுக்கான நீதியே ஒழுங்காக நிலை நாட்டப்படவில்லை என்ற தன்மையைப் பார்க்கின்ற பொழுது குமுதினி முதல் வித்தியா வரை கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் பெண்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது என்று சந்தேகத்தையே வழுப்படுத்தி நிற்கின்றது.