இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது இலங்கை அரசு.

425

 

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது இலங்கை அரசு. இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாகத் தொடரும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணவேண்டும் என்று இரு நாட்டு அரசுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. இதன் அடிப்படையில் இதுவரை இருதரப்புக்களுக்குமிடையே மூன்றுகட்ட பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

sl

இதன்போது தமிழக மீனவர்கள் சார்பில், பாக்கு நீரிணை பகுதியில் இருதரப்பும் நல்லிணக்கத்துடன் மீன்பிடிக்க வேண்டும், படகுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கைதுசெய்யப்படும் மீனவர்களை படகுகளுடன் விரைவாக விடுவிக்க வேண்டும், ஆண்டுக்கு 83 நாள்கள் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோல இலங்கை மீனவர்கள் தரப்பிலும், தமிழக மீனவர்கள் கடலில் ஆழமான பகுதி வரை மீன் பிடிக்கக்கூடிய சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனாலு இந்த கோரிக்கைகள் எவையும் இருதரப்பாலுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இந்திய மத்திய அரசு ஒரு பரிந்துரையை அனுப்பியது. எனினும் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக மறுத்துவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த சமரவீர – “இரு நாட்டு மீனவர் பிரச்சினையை தீர்க்க இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் பரிந்துரையை ஏற்கமுடியாது. 65 நாள்களுக்கு அல்ல, 65 மணி நேரம்கூட அனுமதிக்க முடியாது

SHARE