ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
15 பேரைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைராக ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் 5 வருடத்திற்கு அதன் காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாலித்த பர்ணான்டோ, அனில் சில்வா, மனோஹர டி சில்வா, பேராசிரியர் ஹர்ச கப்ரால், இக்ரம் மொஹம்மட், சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.
இதுதவிர, தாரணி எஸ்.விஜேதிலக்க, ஜே.எம்.சுவாமிநாதன், என்.செல்வகுமாரன், ஜி.ஜி.அருள் பிரகாசம் உள்ளிட்ட மேலும் சிலரும் இந்த குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.