மன்னார்த்தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பாலத்தின் பிரதான தாம்போதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

390

 
மன்னார்த்தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பாலத்தின் பிரதான தாம்போதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இன்று சனிக்கிழமை (9) அதிகாலை 5மணியளவில் கொழும்பில் இருந்து மன்னாருக்கு கடல் உணவுகளை ஏற்றிச் செல்லும் பாரஊர்தி ஒன்று மன்னாரை நோக்கி பயணித்ததில் மன்னார் பிரதான பாலத்திற்கு சற்று தொலைவில் மன்னார் தீவகப்பகுதியையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் தாம்போதியில் விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் குறித்த வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் சிறு கண்டல்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வாகனத்தின் ரொட் உடைந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தின் ரொட் உடைந்ததினால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகியுள்ளது. எனினும் வீதியின் இரு மருங்கிலும் பாதுகாப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்ததினால் பாதையில் இருந்து விலகி பள்ளத்தில் விளாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE