கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்கச்சென்ற மாணவியை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா(வயது -16) என்ற மாணவியே காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் இன்று வவுனியா பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த சிறுமி ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உண்மை தெரியவந்தது.
சிறுமியை அழைத்துச்சென்ற பொலிஸார் நீதிவான் முன்நிலையில் முற்படுத்தினர். இதன்போது சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்திர் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.