இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை மைத்திரி.

348

இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அதற்கான வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்றுமுதல் ஏற்படுத்துவதற்கான யோசனையை தான முன்வைப்பதாகவும் அதனூடாக வெளிப்படும் மக்களின் கருத்துகளை செவிமடுத்து அடுத்த கட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.maithri

SHARE