மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சோமவன்ஸ, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயற்பாட்டாளர்களை இணைந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை சோமவன்ஸ அமரசிங்க மறுத்துள்ளார்.
எனினும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது பற்றிய தகவலை அவர் நிராகரிக்கவில்லை.