காதல் தோல்வி இளம் பெண் தற்கொலை – பண்டாரவளையில் சம்பவம்

590

மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட 16 வயது இளம் பெண் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குருதி அழுத்த குறைக்கும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

காதல் தொடர்பு முறிந்த காரணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால், இந்த இளம் பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

SHARE