இலங்கையில் 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை!

383
 

இலங்கையில் நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனையில், விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீசியதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி.க்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, விதிகளுக்கு மாறாக பந்துவீசுபவர்களை உள்ளுருரிலேயே அடையாளம் காணும் பணி நடைபெற்றது.

கடந்த 2014-15 ஆண்டுகளில் இலங்கை உள்ளுர் கிரிக்கெட் அளவில் 170 பந்துவீச்சாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களது பந்துவீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதில் 42 பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை சரியாக இருந்ததால் அவர்கள் தடையில் இருந்து தப்பினர்.

விதிகளுக்கு முரணாக பந்துவீசிய 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் 16 வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE