
இறக்குமதி வரி செலுத்தப்படாமல் இத்தாலியிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 5 ஆயிரம் கிலோகிராம் பாஸ்தா மற்றும் 115 மது போத்தல்களை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.
இவற்றின் மொத்த பெறுமானம் 11 இலட்சத்திலும் அதிகமாகுமென சுங்க திணைக்களப் பேச்சாளர் சட்டப் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இத்தாலியிலிருந்து 40 அடி உயரமான கொள்கலனில் மேற்படி பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
இவை 05 பேரின் பெயர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குறித்த கொள்கலன் கடந்த 29 ஆம் திகதி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது.
இதில் தனிப்பட்ட நபரின் வீட்டு உபகரணங்கள் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கொள்கலனை சோதனையிட்ட போதே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
5 ஆயிரம் கிலோ பஸ்தாவின் விலை சுங்கவரியுடன் 07 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவாகும். அதேபோன்று மதுபோத்தல்களுக்காக செலுத்தப்பட வேண்டிய வரிப்பணம் சுமார் 3 இல்சதது 61 ஆயிரமாகும்.
இதில் 78 சாராய போத்தல்களும் 37 வைன் போத்தல்களும் இருந்தன. சுங்க அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்துள்ளனர்