தொடர்ந்து செயல்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வின் ஆறாவது நிகழ்ச்சித் திட்டம் முள்ளியவளை தெற்கு சரஸ்வதி முன்பள்ளியில் 03.06.2015 அன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் வன்னி குறோஸ் இணைப்பாளர், கிராமிய வன்னி குறோஸ் சுகாதார நிறுவன அங்கத்தவர்கள், முன் பள்ளி ஆசிரியர்கள், முன் பள்ளி இணைப்பாளர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.