தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

380

 

தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின்-ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்-புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரா. சம்பந்தன் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். May132012 sammnther-ranil sampanthan1 இதன்போது இந்த புதிய திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு எத்தனை எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இன்று மாலை தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் நடைபெற்ற போது ஐதேக முன்வைத்துள்ள புதிய தேர்தல் முறை யோசனையை எதிர்ப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு எத்தனை எத்தனை ஆசனங்கள் என்பதில் சுமூகமான முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிய வருகிறது. ஏனெனில் நான்கு கட்சிகளும் தத்தமது ஆசனக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இன்று கதைத்த விடயங்களை வைத்தும், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்கள் தொகையை விட நான்கு கட்சிகளின் கோரிக்கையும் கூடுதலாக இருந்தபடியால், கட்சிகள் தங்கள், தங்கள் கட்சிகளுக்குள் “எப்படி விட்டுக் கொடுப்புக்களை செய்யலாம்” என்பதை ஆராய்ந்த பின்பு மீண்டும் ஒருவாரத்தின் பின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து புளொட் தலைவர் த.சித்தார்த்தன்  தெரிவிக்கையில், “இன்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற்றது எனவும், அடுத்த கூட்டத்தில் கருத்தொருமித்த முடிவு எடுக்கப்படும் எனவும்” தெரிவித்தார். இதேவேளை, இதுகுறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப் செயாளர் நாயகமுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்  இன்றைய கூட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய தினக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கவில்லை எனவும், மீண்டும் 15ம் திகதி கூடிக் கதைப்பதேனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக” தெரிவித்தார். இதேவேளை இதுகுறித்து ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவிக்கையில், “இன்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்தவொரு பிரச்சினையும் இன்றி சுமூகமாக நடைபெற்றது எனவும், அடுத்த கூட்டத்தில் நல்லதோர் இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும்” தெரிவித்தார்.

SHARE