ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகி எட்டு மாதம் கழிந்து விட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவி வெளியாக இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ஆப்பிள் வல்லுநர்கள் புதிய கருவியில் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் இணையம் முழுவதையும் ஆக்கிரமிக்க துவங்கி விட்டன. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7-இல் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி போன்ற தகவல்களை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
இம்முறை ஆப்பிள் நிறுவனம் சில ஐபோன்களை வெளியிடலாம், இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் அதிகபட்சம் மூன்று ஆப்பிள் கருவிகளை வெளியிடும் என எதிர்பாராக்கப்படுகின்றது.
- 4.7 இன்ச் போன் ஐபோன் 7 என்றும், 5.5 இன்ச் போன் ஐபோன் 7 ப்ளஸ் என அழைக்கப்படலாம். ஒரு வேலை ஆப்பிள் நிறுவனம் 4 இன்ச் ஐபோன் வெளியிட்டால் அது ஐபோன் 7 மினி என்று அழைக்கப்படலாம்.
- ஆப்பிள் என்பதால் பெயர்களில் மாற்றங்கள் இருக்கலாம். பெரும்பாலும் புதிய கருவி ஐபோன் மேக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
- ஐபோன் 6 மாடல்களை போன்றே புதிய ஐபோன் 7 மெலிதாகவே இருக்கும். பெரும்பாலும் புதிய கருவிகள் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
- புதிய கருவியானது முந்தைய மாடல்களை விட சிறந்த பேட்டரிகளை வழங்கும் என்றே கூறப்படுகின்றது.
- டிஸ்ப்ளே ரெசல்யூஷன்களை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் போட்டியாளர்களை விட அதிகம் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே மற்றும் ரெசல்யூஷன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- புதிய ஆப்பிள் கருவியில் டிஎஸ்எல்ஆர் போன்ற தரத்தினை வழங்கும் படி டூயல் லென்ஸ் கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.
- ஐபோன் 7இல் அதிகபட்சம் 12 எம்பி வரை ப்ரைமரி கேராவும், 1080பி ரெசல்யூஷன் கொண்ட முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்
- 12 இன்ச் மேக்புக் கருவியில் இருப்பதை போன்று ஐபோன் 7 கருவியில் யுஎஸ்பி-சி போர்ட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
- இதோடு 3டி ஸ்கிரீன், வளைந்த டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் புதிய கருவியில் இடம் பெற வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இவை யூகங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையே