அமெரிக்கா நிலவும் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால், நீர் விரயம் செய்பவர்களுக்கு நெவடா மாகாணத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது.
நெவடா, கலிபோர்னியா, அரிசோனா, மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் மீட் ஏரி வறண்டு காணப்படுகிறது. அத்துடன் லாஸ் வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீண் நீர் விரயம் செய்பவர்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீண் நீர் விரயம் செய்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர்.