12 பி, உள்ளம் கேட்குமே படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷாம். இவர் ஒளிப்பதிவாளர்+இயக்குனர் ஜீவாவின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் காதல் படங்கள் மட்டுமின்றி 6 மெழுகுவர்த்திகள், புறம்போக்கு போன்ற தரமான படங்களிலும் நடித்து தன் நடிப்பை நிரூபித்தவர்.
இவர் சமீபத்தில் ’எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான். என்னை குருநாதர் ஜீவா அறிமுகப்படுத்தினார். ஊக்கம் தந்து வளர்த்தார். அவரும் திடீரென காலமாகிவிட்டார். கைதுதூக்கி விட யாருமில்லை. கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க’ என உருக்கமாக கூறியுள்ளார். தற்போது இவர் ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.