இலங்கைக்கு செல்லாதீர்கள்; எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா!

205

 

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானிய தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் அல்லது இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் (FCDO) வலியுறுத்தியுள்ளது.

SHARE