வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்…

401

 

வடக்கு மாகாண வீதி  அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம் மற்றும்  5 மாவட்டங்களினதும் பிரதம பொறியியலாளர்கள்  பதவி நிலை உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண மீன்பிடி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் ஆகியோர் அடங்கலாக 12-05-2015 செவ்வாய் காலை 12:30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலின் போது வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார். இவ் விசேட ஒன்றுகூடலானது இம்மாதம் இடம்பெற்ற அரச பணியாளர்களின் இடமாற்றத்தின் பின்னர் புதிய செயலாளர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இருப்பதனால் அவர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளும் நோக்கோடும், இவ்வாண்டுக்கான திணைக்களத்தின் பணிகள் தொடர்பான திட்டமிடல் தொடர்பாகவும், மாகாணத்தில் இருக்கின்ற விசேட தேவைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
unnamed (2) unnamed (3) unnamed (5) unnamed (6) unnamed (7)
SHARE