தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு – பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்!

407

தனியார் பேரூந்து உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைக்கும் வகையில் அதிகளவான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

SHARE