இந்திய ரோ பயன்படுத்திய இரகசிய குறியீடு சீன உளவுப் பிரிவால் கண்டறியப்பட்டுள்ளது

168

சீன உளவு கப்பலின் நடவடிக்கைகளை கையாள இந்தியா ரோ பயன்படுத்திய இரகசிய குறியீடு சீன உளவுப் பிரிவால் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாவது தலைமுறை உளவு கப்பலான யுவான் வாங் 5 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்தான் தற்போது இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கப்பலானது 222 மீட்டர் நீளமும், 25 புள்ளி 2 மீட்டர் அகலமும் உடையது.
சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் – 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.இந்நிலையில்தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையிலேயே, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழக கடலோர பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ளதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் உள்பட 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் வருகிறதா? அகதியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது? என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து அதிநவீன ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ரேடார் கருவி உளவு கப்பலில் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும். சீனகப்பல் 750 கி.மீ. சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது.
இதில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.அம்பாந்தோட்டை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமாக 6 படைதளங்கள் உள்ளன. அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீனகப்பல் சேகரிக்கும் அபாயம் உள்ளதால் சீன உளவு கப்பல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனகப்பல் இலங்கையில் இருந்து வெளியேறிய
தொடரும்………
SHARE