வித்தியா படுகொலையில், 6 மணிநேரம் சிக்கித் தவித்த வடமாகாணசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.

344
 

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் 6 மணித்தியால விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மும்முர விசாரணையில் ஈடுபட்டுவரும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளே இவரை நேற்று முன்தினம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புபட்டதாக கருதப்படும் ஒருவரை மடக்கிப் பிடித்த பிரதேசவாசிகள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்த வேளை பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த குறித்த நபர் கொழும்பு – வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற வேளையில், பொலிஸார் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டராங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸாரின் பிடியிலிருந்த சந்தேக நபர் எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பது தொடர்பிலும், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீதான தாக்குதல் குறித்தும் இதன்போது விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புங்குடுதீவு படுகொலை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

jejasinka_viththija

SHARE