அதற்குள் விளம்பரத்தில் நடிக்க வந்துவிட்ட ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்!

115

 

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஷங்கர், அவரின் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் அதிதி ஷங்கர். அவரின் முதல் திரைப்படத்திலே அனைவரின் பாராட்டுகளை பெற்று இருந்தார் அதிதி.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது படங்களில் கலக்கி வரும் அதிதி ஷங்கர், விளம்பரங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார்

SHARE