பிரபல தொலைக்காட்சியால் கமலுக்கு வந்த சோதனை- அதிர்ச்சியில் படக்குழு

379

கமல்ஹாசன் படம் இதுநாள் வரை பிரச்சனை இல்லாமல் வருவது பெரிய விஷயம் தான், அந்த வகையில் பாபநாசம் படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சொன்ன தேதியில் வெளிவந்து நல்ல வசூலை பெற்று வருகின்றது.

இப்படத்திற்கு மத்திய அரசு யு சான்றிதழ் வழங்கியுள்ளது, ஆனால், தற்போது மாநில அரசு வரிவிலக்கு தரவில்லை.

ஏனென்றால் காவல்துறையினர் சிறுமிகளைத் துன்புறுத்தும் காட்சிகள் காவல்துறையினர் மீதான நம்பிக்கையைக் கெடுத்துவிடும் என்றும், தவுறு செய்த ஒருவன் பாவம் கழிக்க ஆற்றில் குளித்தால்போதும் என்கிற பிற்போக்கு சிந்தனை படத்தில் இருக்கிறதென்றும், பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக்காட்டுவது சரியில்லை என்றும் காரணங்களைக் கூறி இத்திரைப்படம் வரிவிலக்குக்குத் தகுதியானதல்ல என்கிற பரிந்துரை செய்திருக்கிறார்களாம்.

இதனால் இப்படத்திற்கு வரிவிலக்கை ரத்து செய்ய, தற்போது படக்குழு வசூலில் 30% வரியாக செலுத்தி வருகின்றதாம். மேலும், ஒரு சிலர் அதெல்லாம் ஒன்றுமில்லை, படத்தை அந்த தொலைக்காட்சிக்கு விற்றதால் தான் இந்த நிலைமை என்று கூறி வருகின்றனர்.

SHARE