மகிந்தவின் சிபாரிசின் பேரில் திஸ்ஸ மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் தேசிய பட்டியலில்!

373

 

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ் ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

thissa-attanayake1_4

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமையவே இவர்கள் இருவரும் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகிச் சென்று மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் இணைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்நறுவை தொகுதியின் முன்னாள் அமைப்பாளரான வடமத்திய மாகாண சபை உறுப்பினர் கிங்சி நெல்சன், புத்தளம் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரான வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லால் பெர்னாண்டோ உட்பட சிலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் கையெழுத்திட உள்ளனர்.

SHARE