கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றிக்காக பாடுபட்ட சிவில் குழுக்களை ஜனாதிபதி கடந்த புதன்கிழமையன்று சந்தித்தார்.
இதன்போது சிவில் குழுக்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தாம் தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கலை எதிர்த்ததாக குறிப்பிட்டார்.
எனினும் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதாக சிவில் குழுக்களின் சார்பில் ஜனாதிபதியை சந்தித்த தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் மாதுலுவேவே சோபித தேரர் அதில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இவரே மைத்திரியின் வெற்றிக்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கியமை தொடர்பில் மைத்திரி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்பினருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபில் வேட்பு மனு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் அளிக்கவுள்ளார்.
எதிர்வரும் 13ம் திகதி இது தொடர்பான விளக்கம் அளிக்கப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில் அவருடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிவில் அமைப்பின் பிரதானிகளிடம் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த புதன் கிழமை இரவு இடம்பெற்ற இக்கலந்துரையாடலுக்கு காமினி வியன்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, பேசாரியர் நிரமல் ரஞசித் தேவஸ்ரீ, சமன் ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் ஸ்டாலின், தர்மஸ்ரீ பண்டாரநாயக்க, ரவி ஜயவர்தன ஆகியோர் மற்றும் தம்பர அமில தேரரும் கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இக்கலந்துரையாடலில் மாதுலுவாவே சோபித்த தேரரை கலந்து கொள்ளுமாறு அழைத்த போதிலும் அவர் அவ்அழைப்பை நிராகரித்துள்ளார்.