
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அர்ஜூன ரணதுங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, ஏர்ள் குணசேகர, சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க. அத்துருரலியே ரத்ன தேரர் உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறவுள்ளனர்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச உட்பட அவரது கோஷ்டியினருக்கு அருவருப்பு இல்லை என்றாலும் அவர்களுடன் இணைந்து போட்டியிட எங்களுக்கு அருவருப்பாக உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, திருடர்கள், ஹெரோயின், எத்தனோல் வியாபாரிகளுக்கு வேட்புமனுவை வழங்கி விட்டது. அந்த முன்னணியில் இணைந்து போட்டியிட எமக்கு அருவருப்பாக உள்ளது.
இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளனர் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.