முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக நல்லாட்சி

357

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக நல்லாட்சிக்கான ஐக்கியதேசிய முன்னணியை உருவாக்குதென்ற முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடனயே  முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
63-independence-day
இந்த முன்னணியை அமைப்பதற்கு ஜனாதிபதி தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சமன் அத்தாவுடஹெட்டி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள சிறிசேன விசுவாசிகள் வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியை சந்தித்து தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் இணையவிரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவிற்கு எதிராக போட்டியிடுவதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிசேன தன்னுடைய ஆதரவாளர்களிடம் கட்சியில் தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,ராஜபக்சவிற்கும் அவரது விசுவாசிகளிற்கும் வாய்ப்பை வழங்கமாட்டேன் என தன்னால் மறுப்பு தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான முன்னணியில் இணையப்போவதாக அவர்கள் தெரிவித்த வேளை சிறிசேன அவர்கள் சுதந்திரமாக அந்த முடிவை எடுக்கலாம், தான் அவர்களுடனேயே இருப்பதாக தெரிவித்தார் என பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சமன் அத்தாவுடஹெட்டி தெரிவித்துள்ளார்
SHARE