நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு

305

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சிச் சார்பற்ற ஓர் நிலைப்பாட்டை ஜனாதிபதி பின்பற்றுவார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைமைப் பதவிகளை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜனாதிபதி மைத்திரிபாலவை காண முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

SHARE