குருணாகல் மாவட்டத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக வெளியாக தகவலை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்
மஹிந்த ராஜபக்ச குருணாகலில் போட்டியிடுவதை வைத்துக்கொண்டு இந்த வதந்தி பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவரை தொடர வேண்டிய அவசியம் இல்லை. மஹிந்த தொடர்பில் மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவர் என்று சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச மேற்கொள்ளும் அனைத்து சூழ்ச்சிகளும் முறியடிக்கப்படும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.