யாழில் தீயில் கருகிய வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வந்த யுவதி யாழில் தானக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் அதிர்ச்சி பின்னணி.

306

யாழ்ப்பாணத்தில் காதலன் வீட்டின் முன்பாக யுவதியொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பரபரப்பு சம்பவம் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

ananthy

அச்சுவேலி வடக்கை சேர்ந்த சேர்ந்த 26 வயதான இந்த யுவதி பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் அச்சுவேலி- இடைக்காட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலியுடன் இஸ்டம்போல உல்லாசம் அனுபவித்துவிட்டு, அவரை கழற்றிவிடும் திட்டத்துடன் வாலிபர் செயற்பட்டிருக்கிறார்.

இதனை மோப்பம்பிடித்து விட்ட யுவதி, தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். எனினும், வாலிபர் அதற்கு சம்மதிக்கவில்லை.

யுவதி பொலிஸ் வேலை பார்ப்பதால் தன்னால் திருமணம் செய்ய முடியாதென்றும், யுவதியுடன் உல்லாசம் மட்டும் அனுபவிக்க முடியுமென்றும் முகத்திலடித்தாற்போல கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தால் அதிர்ச்சியும், மனவேதனையுமடைந்தவராக யுவதி இருந்துள்ளார்.

அண்மைநாட்களாக யுவதியின் கண்ணில்படாமல் வாலிபர் போக்குக்காட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை ஆறுமணியளவிலேயே வாலிபரின் வீட்டிற்கு யுவதி சென்றுவிட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோதும், வாலிபர் மறுத்து விட்டார். இதனால் அங்கு பெரும் களேபரம் வெடித்தது.

அயலவர்களும் வேடிக்கை பார்க்க கூடியுள்ளனர். இந்த சர்ச்சை நீண்டநேரம் நீடித்துள்ளது. எனினும், வாலிபர் வளைந்து கொடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமும் விரக்தியுமடைந்த யுவதி, விறுவிறுவென வீட்டிற்கு வெளியில் வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார்சைக்கிளில் இருந்து பெற்றோலை எடுத்து தன்மீது ஊற்றி, தனக்குத்தானே தீமூட்டியுள்ளார் என அங்கிருந்தவர்கள் தீபம் செய்திளாரிடம் கூறியுள்ளனர்.

எனினும் அங்கு நின்றவர்கள் விரைந்து செயற்பட்டு, யுவதியை காப்பாற்றி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

SHARE