தனது காதலி கீதா பர்ஸாவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரிடம் அழைத்து சென்று ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பர்ஸாவை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
“தில் தியா ஹை” என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீதா, அடுத்தடுத்து 5 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் அளவில் ஒரு இடத்தை தனக்கென உருவாக்கிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள கீதாவின் “செகண்ட் ஹஸ்பண்ட்” படத்தில் தனது காதலன் ஹர்பஜன் சிங்கை கெளரவ வேடத்தில் அவர் நடிக்க வைத்துள்ளார்.
மேலும், சச்சினின் தீவிர ரசிகையான கீதா, ஹர்பஜனிடம் சச்சினை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் கேட்டுள்ளராம்.
இதனால் படம் வெளியாவதற்கு முன்பு கீதாவை சச்சினிடம் அழைத்துச் சென்று ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்துள்ளார் ஹர்பஜன்.
படம் வெற்றி பெற சச்சின் டெண்டுல்கரும் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

|