பாகிஸ்தான் தோல்வி : பாபர் ஆசம் கருத்து

160

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஷகீன்ஷா அப்ரிடி. நேற்றைய இறுதி போட்டியில் அவர் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹால்சை அவுட் செய்தார். 13-வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி புரூக்சின் கேட்சை பிடிக்கும் போது ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது.

வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் களத்தை விட்டு வெளியே சென்றார். அவர் 2.1 ஓவர் தான் வீசி இருந்தார். எஞ்சிய 11 பந்துகளை ஷகீன் ஷா அப்ரிடியால் வீச முடியாமல் போனது.

அவர் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார்.

ஷகீன் ஷா அப்ரிடி தொடர்ந்து பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

SHARE