இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து ஸ்ரீகாந்த்

175

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும்.

இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும்.

அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன். 1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள்.

அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

SHARE