தமிழ் சினிமா மட்டுமின்றி இசையை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இன்று துக்கமான நாள் தான், இசையுலகில் ராஜவாக திகழ்ந்த எம்.எஸ்.வி இன்று இயற்கை எய்தினார்.
இவரின் பிரிவு ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பல திரை நட்சத்திரங்கள் நேரில் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு பேசுகையில் ‘எம்.எஸ்.வி அவர்கள் ஒரு துறவி போல் வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் வெற்றிகளுக்கு பின்னால் இருந்தவர்.
அவர் மட்டும் இல்லையென்றால் கே.பாலசந்தர், ஸ்ரீதர் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க மாட்டார்கள்’ என கூறினார்.