Total
அஜித் எப்போதும் சினிமா சம்மந்தப்பட்ட எந்தவிதமான விழாக்களிலும் கலந்துக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், திரைத்துறையில் யாராவது காலமாகினால் முதல் ஆளாக வந்து நிற்பார்.
தற்போது அதிலும் அஜித் சில காலங்களாக கலந்து கொள்வதில்லை, கே.பாலசந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் மரணமடைந்த போது கூட அஜித் வரவில்லை.
அதேபோல் நேற்று காலமான இசையுலகின் ஜாம்பவான் எம்.எஸ்.வியின் மரணத்திற்கு வராதது அனைவரிடையே பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து விசாரிக்கையில் அஜித் படப்பிடிப்பிற்காக தற்போது வெளிநாட்டில் உள்ளார், அதனால் தான் அவர் வரவில்லை என்று தெரிகின்றது. எம்.எஸ்.வி அவர்கள் முதன் முதலில் திரையில் நடிகனாக தோன்றியது அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.