ஐ படத்திற்கு பிறகு தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் எமி ஜாக்ஸன். மேலும், இவர் உதயநிதிக்கு ஜோடியாக கெத்து என்று படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது எமி ஜாக்ஸன் ஒரு மலைச்சரிவில் இருந்து தவறி விழ, உடனே கருணாகரன் அவரை காப்பாற்றினார் என்று ஒரு செய்தி வந்தது.
இதனால், அவர் வீட்டில் என்ன நடந்தது என்பதை சமீபத்தில் உதயநிதி முன்னணி வார இதழ் ஒன்றில் கூறுகையில் ‘இந்த செய்தியை பல பத்திரிக்கைகளில் எமி ஜாக்ஸனின் படு கிளாமர் புகைப்படத்துடன் அருகில் கருணாகரன் படத்தை வைத்திருந்தனர். இதை கண்ட அவருடைய மனைவி ‘நீங்க காப்பாற்றும்போது அவங்க இந்த டிரெஸ்லதான் இருந்தாங்களா?’ என்று கேட்க, அதை கருணாகரன் எங்களிடம் சொன்ன ரியாக்ஸன் இருக்கே’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.