முதல் இடத்திற்கு முன்னேறிய மார்னஸ் லபுசேன்

154

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் 935 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் பெர்த்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இரட்டை சதம் மற்றும் சதம் அடித்தார். இதனால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்து, 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 4வது இடத்திலும் உள்ளார். இந்திய வீரர்களில் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும் ,கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 11-வது இடத்திலும் உள்ளனர். – Maalaimalar

SHARE