வேட்பாளர் வீடு வீடாக செல்லலாம் – மஹிந்த

310

தேர்தல் காலத்தில் அபேட்சகர்களும் ஊடக நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார்.

elasen

தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என பொலிஸார் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக் குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது,
தேர்தல் காலத்தில் 15 பேருக்கு உட்பட்ட ஒரு குழுவுக்கே வீடு வீடாகச் சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியும். தேர்தல் சட்டத்தில் இதற்கு இடமிருக்கின்றது எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

SHARE