பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே பிரதமரை தெரிவு செய்வதற்கு தேவையானது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து ஜனநாயக விரோதமானது.
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவரையே பிரதமராக தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வாறான ஒருவரை நியமிப்பதே ஜனாதிபதியின் கடமையாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிழையான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக தெரிவு செய்தார்.
இது அரசியல் அமைப்பிற்கு முரணான ஓர் நடவடிக்கையாகும்.
அரசியல் அமைப்பை பாதுகாப்பதனை விடவும் ஜனாதிபதி, தம்மை பதவியில் அமர்த்திய தரப்புடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்தார்.
இது ஜனநாயகமான நாடொன்றிற்கு உசிதமான காரியமல்ல என சரத் என் சில்வா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.