கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசகிலா ராவிராஜை எப்படியாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி மேற்கொண்ட போதிலும், இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சசிகலா ரவிராஜ் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.