தல அஜித் வீரம் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்திற்கு பிறகு அஜித் சத்யஜோதி நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புகொண்டிருகிறார். இப்படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா? பல காலமாக ’இந்த கூட்டணி ஒன்று சேராதா’ என்று நாம் பேசி வந்த கே.வி.ஆனந்த் தான். இப்படத்தின் சம்பளம், பட்ஜெட் பற்றிய அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம்.
முதலில் சத்யஜோதி நிறுவனம் மூன்று முகம் படத்தை ரீமேக் செய்யலாம் என்று அஜித்திடம் சொன்னார்களாம். ஆனால் ”இப்போதைக்கு வேண்டாம், அவர் சொன்ன கதையே சூப்பரா இருக்கு அதுவே பண்ணிடலாம்” என்று சொல்லி இருக்கிறார்.