இலங்கை அணி அறிவிப்பு

146
இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகவுக்கு இரண்டு உப தலைவர்கள் ஆதரவு வழங்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த போட்டித் தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவராக குசல் மெண்டிஸும், டி20 போட்டிகளுக்கான உப தலைவராக வனிந்து ஹசரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்திய சுற்றுப்பயணத்தின் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பானுக ராஜபக்ச மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம் ஜெஃப்ரி வென்டர்சே மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE