
2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடருக்கு, இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, விளையாடிய வியாஸ்காந்த் 8 போட்டிகளில் 13 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் வளர்ந்துவரும் சிறந்த கிரிக்கட் வீரருக்கான விருதையும் அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.