முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் – ஜனாதிபதி பெருநாள் வாழ்த்துச் செய்தி

336
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
maith

வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கி செல்கின்ற எமது தேசத்தில் இஸ்லாம் மதம் எவ்வாறு பங்களிக்கின்றது என்பதை ஈதுல் பிதுர் பண்டிகை எமக்கு நினைவூட்டுகின்றது.

இன்­றைய தினத்தில் ஈதுல் பிதுர் பண்­டி­கையை கொண்­டாடும் இலங்­கைவாழ் மற்றும் அனைத்­து­லக முஸ்லிம் மக்­க­ளு­கக்கும் எனது மன­மார்ந்த வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

கடந்த மாத­மா­னது நோன்பு ஆன்­மீக மலர்ச்சி மற்றும் உதவி தேவைப்­பட்­டோ­ருக்கு உதவி புரியும் கால­மாக இருந்­தது. ஈதுல் பிதுர் பண்­டி­கையின் மூலம் பரி­சுத்தம் புனி­தத்­தன்மை மற்றும் ஆன்­மீக ரீதி­யான தூய்மை ஆகி­யவை மீளப்­பெற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­துடன் மனி­தா­பி­மான ரீதியில் எம்மை ஒற்­று­மைப்­ப­டுத்தும் விழு­மி­யங்­களும் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.

உலக மதங்­களின் செழிப்­பு­மிக்க மர­பு­ரி­மையை இலங்கை அடைந்­தி­ருப்­பதால் நிலை­யான நல்­லி­ணக்­கத்­தையும் ஒற்­று­மை­யையும் நோக்கிச் செல்­கின்ற உமது தேசி­யத்தில் இஸ்லாம் மதம் எவ்­வாறு பங்­க­ளின்­னின்­றது என்­பதை ஈதுல் பித்ர் பண்­டிகை எமக்கு நினை­வூட்­டு­கின்­றது.

இன்ஷா அல்லாஹ், இலங்கை வாழ் முஸ்லிம் மக்­களின் மகிழ்ச்­சி­க­ர­மான ஈதுல் பிதுர் பண்­டி­கைக்கும் பாது­காப்­பு­மிக்க சௌபாக்கியமான எதிர்காலத்திற்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

ஈத் முபாரக்
மைத்ரிபால சிறிசேன

SHARE